2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாணந்துறை தெற்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் இடைநீக்கம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் உத்தரவுக்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாணதுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து மூன்று துப்பாக்கிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்தநிலையில், இவற்றில் இரண்டு துப்பாக்கிகள், குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே, பிரதான பொலிஸ் பரிசோதகர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .