Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரூ.2,000 சம்பளத்தில் இணைப்பு
ஓய்வூதியத் திட்டத்துக்கு ஓய்வில்லை
புகைச் சோதனைக் கட்டணம் குறைப்பு
ஊ.சே.நி., ஊ.ந.நி.களில் மாற்றமில்லை
தேசிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
வரவு-செலவுத் திட்டத்துக்கெதிராக சுமார் 150 தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை குதிக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தார்.
அதனடிப்படையில், அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபாய் சம்பள உயர்வை, மூன்று கட்டங்களாக, அடிப்படைச் சம்பளத்தில் சேர்ப்பதற்குச் சம்மதம்.
இதன்படி, அடுத்தாண்டு ஜனவரி முதல் 2,000 ரூபாய், அடிப்படைச் சம்பளத்தில் சேர்க்கப்படும். ஓய்வூதியத் திட்டம், இல்லாதொழிக்கப்படமாட்டாது.
அது, ஏற்கெனவே காணப்படும் எல்லா அரச ஊழியர்களுக்கும் தொடர்ந்தும் வழங்கப்படும். வாகனப்புகைச் சோதனைக்கான கட்டணம், இடைக்கால அடிப்படையில் 1,500 ரூபாயாகக் குறைப்படும்.
வருமான உத்தரவுப் பத்திரத்துக்கான கட்டணம், 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படும். தனியார்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படக் கோரப்பட்ட 2,500 ரூபாய், அடுத்தாண்டு மே மாதத்துக்குள் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டுமென்பதோடு, அதற்கான சட்டம் ஜனவரி மாதம் உருவாக்கப்படும்.
ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியன தற்போதுள்ளபடி செயற்படவேண்டுமென்ற கோரிக்கையை ஆராய்வதற்கு, செயற்குழுவொன்று நியமிக்கப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .