2025 மே 22, வியாழக்கிழமை

புதிய முன்னணியை உருவாக்க முயற்சி

Kogilavani   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவென ஒரு புதிய அரசியல் முன்னணியைத் தோற்றுவிக்க, மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய முன்னணியின் பெயர் 'எமது ஸ்ரீலங்கா முன்னணி' என அமையும்.

தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, பிவிதுரு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளே,  இம்முன்னணியைத் தோற்றுவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஆறுமாதங்களுக்குப் பிற்போடுவதற்கு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உட்கட்சி அதிகாரப் போட்டிக்கு இன்னும் தீர்வுகாணாது இருப்பதனால், அவர் இவ்வாறு தீர்மானித்துள்ளார்.
அரசாங்கத்திலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் சிலரின் கருத்துப்படி, இணைந்த எதிர்க்கட்சி பிளவடையும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான தகவல்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் அரசாங்கப்பக்கம்  இணையவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X