2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

போதையில் வாகனம் செலுத்திய 152 சாரதிகள் கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது போதையில் வாகனம் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் 152 சாரதிகளை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலக ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்று  19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் .

இந்த 152 சாரதிகளில், லொறிசாரதி ஒருவர், வான் சாரதிகள் இருவர், கார் சாரதிகள் ஐவர், முச்சக்கரவண்டி சாரதிகள் 48 பேர், மோட்டார் சைக்கிள் சாரதிகள் 90 பேர் மற்றும் ஏனைய வாகனங்களின் சாரதிகள் அறுவர் அடங்குவர் என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .