2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பாதசாரி கடவையில் விபத்து: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2015 நவம்பர் 28 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- நீர்கொழும்பு வீதியில், சுகததாஸ உள்ளக விளையாட்டரங்குக்கு அண்மையில் உள்ள பாதசாரி கடவையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபரொருவர் படு காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டைக்கும் ஜா-எலைக்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 187 வழித்தட இலக்கத்தை கொண்ட தனியார் பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பு கோட்டையை நோக்கி மிகவேகமாக பஸ்ஸை  செலுத்திவந்த சாரதி, பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற பாதசாரியை மோதிவிட்டு, வீதிகளுக்கு நடுவே வைக்கப்பட்டுள்ள கொங்கிரீட்டிலான பூத்தொட்டிகளுடன் பஸ்ஸை மோதி நிறுத்தியுள்ளார்.

பாதசாரிகள் கடவைகள் இருக்கும் இடங்களில், வாகனங்களை செலுத்தவேண்டிய வேகத்தை விடவும் மிகக்கூடுதலான வேகத்திலேயே அவர், அவ்விடத்தில் பஸ்ஸை செலுத்திவந்ததாக அறியமுடிகின்றது.

சம்பவத்தையடுத்து அந்த பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 (படஉதவி: தமிழ்மிரர் இணையத்தளம், தமிழ்மிரர் பத்திரிகை வாசகர்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X