2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொன்சேகாவுக்கு அமைச்சு இல்லை?

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, சட்டம் மற்றும் ஒழுங்குகளுக்கான அமைச்சுப் பதவி வழங்கப்பட மாட்டாது என்று அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீல்ட் மார்ஷல் பொன்சேகாவுக்கு, பொலிஸ் திணைக்களம் மற்றும் ஏனைய சட்டம் மற்றும் ஒழுங்குகளுக்கு கீழ் உள்ள நிறுவனங்களை கண்காணிப்பதற்கான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளதாகவும் எனினும், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்புரி தொடர்புடைய பொறுப்புக்கள் அவருக்கு வழங்கப்படும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டம் மற்றும் ஒழுங்குகளுக்கான அமைச்சராக சாகல ரத்னாயக்கவே இருப்பார் என்றும், இது போன்றதொரு தீர்மானம் அரசாங்கத்தினால் எடுக்கப்படவில்லை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் நாட்களில் பதவியேற்பார் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையிலான ஜனநாயகக் கட்சிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (03) கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X