2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

புனிதையாகின்றார் அன்னை தெரேசா

George   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் இன்று வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபெற இந்தியாவின் சார்பில் வெளிவிகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான அங்கு சென்றுள்ளது.

அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்குவதாக பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதன்படி அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு, வத்திகான் புனித பீட்டர் சதுக்கத்தில் நடக்கிறது.

அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணி)  அன்னை தெரேசா புனிதையாக உயர்த்தப்படுகின்றார்.

இந்நிகழ்வில் சுமார் 3 இலட்சம் பேர் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .