2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

ப்ரெடி கமகே மீது தாக்குதல்: துரித விசாரணை வேண்டும்

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் இணைய ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ப்ரெடி  கமகே மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைதுசெய்து நீதியின் முன் நிறுத்துமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் நலன்களை பாதுகாப்பதாக கூறும் புதிய அரசாங்கத்தின் ஆட்சியில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளமை கவலையளிப்பதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

'தனது ஊடக செயற்பாட்டை மேற்கொண்ட ப்ரெடி  கமகே மீது தாக்குதல் மேற்கொண்ட நபர்களை உடனடியாக கண்டறிந்து, கைதுசெய்து, நீதியின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகவியலாளரான ப்ரெடி  கமகே, நீர்கொழும்பு மாநகரசபைக்கு அருகில் வைத்து நேற்று வியாழக்கிழமை தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனந்தெரியாத இரண்டு நபர்கள், தடிகளால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .