2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

பிரித்தானிய பிரதிநிதிகளுடன் சந்திப்பு

George   / 2016 ஜூன் 06 , பி.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்துக்கான வதிவிட செயலாளர் சைமன் மெக்டொனால்ட்  மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான

இங்கிலாந்து திணைக்களத்தின் நிரந்தர செயலாளர் மார்க் லோவ்கோக் ஆகியோர், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் உடனிருந்தார். 

இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்குடன் இவ்விருவரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். 

இவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடுவர் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .