2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரித்தானியாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று புதன்கிழமை (11) முற்பகல் லண்டன் பயணமானார்.

ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று (11) முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் EK 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர்.
 
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு, நாளை வியாழக்கிழமை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார். 

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X