2025 மே 21, புதன்கிழமை

பெருமழைக்கு எல் நினோவே காரணம்: ஜுன் வரை நீடிக்கும்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், கடந்த சில தினங்கள் பெய்த பெருமழையுடன் எல் நினோ சம்பந்தப்பட்டதாக இருக்க முடியுமென ஐ.நாவினால் விடுக்கப்பட்ட ஆசிய பசுபிக் நாடுகளுக்கான எல் நினோ மீதான 3 ஆவது ஆலோசனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய எல் நினோத் தாக்கம், 1997- 1998இன் பின்னர் காணப்பட்ட மிகப் பலமாக எல் நினோ தாக்கங்களில் ஒன்றாக இருக்கலாம் என எச்சரித்த இக்குறிப்பு, இது 2016ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுவரை நீடிக்கலாம் என தெரிவித்துள்ளது.2014இன் பிற்பகுதியில், பசுபிக்கில் ஆங்காங்கே மெதுவாகத் தாக்கத் தொடங்கிய இது, ஆசிய மற்றும் பசுபிக் பெரும் பகுதிக்கு வியாபித்துள்ளது.

இது, சில இடங்களில் மேலும் தீவிரமடையலாம். பல நாடுகளில் மழைவீழ்ச்சி, விவசாயத்தைத் தாக்கி வருமான இழப்பீட்டுக்கு காரணமாகியுள்ளது.

எல்லை தாண்டி நடக்கும் எல் நினோவின் இயல்பு காரணமாக, ஒருநாடு, இதனைத் தனித்துக் கையாள முடியாது. இதற்காகப் பிராந்தியமட்ட ஒத்துழைப்பு அவசியமாகின்றது. எல் நினோ காலநிலைக்குழப்பம், அவ்வப்போது ஏற்படும் நிகழ்வாகக் கருதப்படக்கூடாது.

பொதுவான ஆபத்துக்களுக்குத் தீர்வுகாண தடுப்பு ஆபத்துக் குறைப்பு நடவடிக்கைளை எடுப்பதற்கு, கடந்த காலத்தில் அவதானிக்கப்பட்ட பாதிப்பு கோலங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இக்குறிப்பு கூறியுள்ளது. எல் நினோ எனப்படுவது, பசுபிக் சமுத்திரத்தில் ஏற்படும் வெப்பநிலை மாற்றமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .