Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 பெப்ரவரி 29 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களாகவிருந்த பலர், அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், கம்பஹா தொகுதியின் அமைப்பாளராகவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க, தெஹிவளை அமைப்பாளராகவிருந்த தனசிறி அமரதுங்க, கண்டியில் திலும் அமுனுகம, கொலன்னாவையில் துமிந்த சில்வா, மஹரகமையில் காந்தி கொடிகார ஆகியோரே நீக்கப்பட்டு, அவர்களின் இடத்துக்கு புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிதாக நியமனம் பெற்ற தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்
கொழும்பு மாவட்டம்
மஹரகம - மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய பெரேரா
தெஹிவளை - சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை
கொழும்பு மேற்கு - மாகாணசபை உறுப்பினர் ஹெக்டர் பெத்மஹே
கொலன்னாவ - கொட்டிகாவத்தை முல்லேரியா பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன குணசிங்க சோலங்கஆராச்சி
அவிசாவளை - சுமித் விஜயமுனி சொய்ஸா
கம்பஹா மாவட்டம்
மினுவாங்கொடை - ருவன் ரணதுங்க
மீரிகம (இணைந்த) - சஞ்சய சிறிவர்;தன
களுத்துறை மாவட்டம்
பாணந்துறை - அமைச்சர் மஹிந்த சமரசிங்க
அகலவத்தை - மேல்மாகாண சபை அமைச்சர் ரஞ்சித் சோமவன்ச
களுத்துறை (இணைந்த) - மேல்மாகாண சபை அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ்
மாத்தறை மாவட்டம்
மாத்தறை - தென்மாகாண சபை கல்வி அமைச்சர் சந்திம பெம்சித் ராஜபுத்ர
கண்டி மாவட்டம்
ஹேவாஹெட்ட - அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க
செங்கடகல - மாகாண சபை அமைச்சர் திலின பண்டார தென்னக்கோன்
உடுநுவர - மத்திய மாகாண சபை உறுப்பினர் மானெல் பண்டார அபேரத்ன
கண்டி - மஹிந்த அபேகோன்
அக்குரண - மொஹமட் சம்சான்
திருகோணமலை
சேருவில - நலின் குணவர்தன
மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்
கொழும்பு - சுஜீவ சந்திரசிறி
கம்பஹா - அஞ்சு ஸ்ரீ ஷாம் பெரேரா
களுத்துறை - அசங்க எதிரவீர
காலி - மாகாண சபை உறுப்பினர் சண்ண சாலிய மென்டிஸ் மற்றும் திசர குணசிங்க
மாத்தறை - பஸந் யாப்பா அபேவர்தன மற்றும் நலின் ரணவீர
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago