2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புரட்சி தொடரும்: ஜனாதிபதிக்கு ஞானசாரதேரர் கடிதம்

Gavitha   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொடவை திட்டியதாகக் கூறப்பட்டு, கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரர், மகாநாயக்கர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

தான் விளக்கமறியலில் இருந்தாலும், பொது பல சேனா அன்று ஆரம்பித்த அஹிம்சை வழி புரட்சியைத் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த காலத்தில் நடந்தவற்றுக்காக தற்போது தனக்குக் கிடைத்துள்ள முடிவையும் நாட்டுக்காக தான் ஏற்றுக்கொள்வதாகவும் இது தனக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதம், பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண. கலகொட அத்தே ஞானசார தேரராலேயே எழுதப்பட்டுள்ளதாக, பொதுபல சேனாவின் ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எனினும் குறித்த கடிதம், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தெளிவில்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X