2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பிரதேச செயலாளருக்கு மரண அச்சுறுத்தல்

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் வடக்கு, நுவரகம பிரதேச செயலாளர் ருவன் விஜேயசிங்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது உத்தியோகபூர்வ இல்லத்துக்கு இன்று அதிகாலை 2 மணியளவில் வந்த சிலர், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளனர்.

இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பிரதேச செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .