2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பிரதியமைச்சரின் அச்சுறுத்தலை விசாரிக்கவும்

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தர்ஷன சஞ்சீவ 

முதலாம் தரத்துக்குப் பிள்ளையொன்றை சேர்த்துக்கொள்ளுமாறு, களுத்துறையிலுள்ள பாடசாலையொன்றின் அதிபரை, பிதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும கட்டாயப்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சின் அதிகாரியொருவருக்கு உத்தரவிட்டுள்ளார். 

இந்த விசாரணைகளின் முடிவுகள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், அதற்கான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்துள்ளார். 

பிள்ளையொன்றை முதலாம் தரத்துக்கு சேர்த்து விடுவதற்கு, குறித்த பிள்ளையின் தாயுடன் களுத்துறையிலுள்ள பாடசாலையொன்றுக்குச் சென்றுள்ள பிரதியமைச்சர், பிள்ளையை சேர்த்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். குறித்த பிள்ளையின் பெயர், அனுமதி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியலில் இல்லை என்பதனால், அவரைச் சேர்த்துக்கொள்ள முடியாது என்று பாடசாலையின் அதிபர் பிரதியமைச்சருக்குத் தெரிவித்துள்ளார். பின்னர், குறித்த பிள்ளை பாடசாலையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாடசாலைகளில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மாணவர்களைச் சேர்த்துக்கொள்வது குறித்து, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், கண்டனம் வெளியிட்டிருந்தார். இதன்பின்னரே, இந்த விடயம் குறித்தான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X