2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பிரபல அரசியல்வாதி மகனின் அட்டகாசம்

Kanagaraj   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகனால், கொழும்பில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் அட்டகாசம் புரியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன.

சம்பவத்தில், அந்த இரவு கேளிக்கை விடுதியின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகள் அடிந்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

சம்பவத்தில், அந்த விடுதியில் கடமையிலிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்துச் சேவைகள் பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .