Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவர்கள் இருவரிடமிருந்தும் 36 போலி 1,000 ரூபாய் நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உடுகம பொலிஸார் தெரிவித்தனர்.
உடுகம மேற்கு பிரதேசத்திலுள்ள கடையொன்றுக்குச் சென்று சவர்காரம் வாங்குவதற்காக 1,000 ரூபாய் நாணயத்தாளை அவர்களில் ஒருவர் வழங்கியுள்ளார்.
இதன்போது குறித்த நாணயத்தாளின் மேல் கடைக்காரருக்கு சந்தேகம் எழுந்தமையால் அவர் பொலிஸுக்கு அறிவித்துள்ளார்.
இதன்பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணைகளின் போது அவர்களிடமிருந்த போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பொட்டல மற்றும் தெலிக்கடவையைச் சேர்ந்த 33, 43 வயதுள்ள இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உடுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
28 minute ago
32 minute ago