Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எஸ்.செல்வநாயகம்
தமது பால்நிலை காரணமாக, பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாக முறைப்பாடு செய்து, பெண் உரிமைகள் செயற்பாட்டாளரொருவர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு எதிராக ஆணைகோரும்(ரிட்) மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில், ; நேற்று வியாழக்கிழமை(03) தாக்கல் செய்துள்ளார்.
பெண்புலம் பெயர் தொழிலாளர்களிடம் குடும்பப் பின்னணி அறிக்கை சமர்ப்பிக்கக் கோரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் என்பவை விடுத்துள்ள அறிக்கையை எதிர்த்து, பிரிய தர்ஷினி ஆரியரத்ன என்பவர்
தாக்கல் செய்துள்ளார்.
ஐந்து வயதுக்குட்பட் பிள்ளைகளுக்கு, தாய் மற்றும் தந்தையின் ஆதரவு தேவையாக ,ருக்கும் போது, தாயிடம் மட்டும் ,வ்வாறான குடும்பப் பின்னணி அறிக்கை கோருவது, பெண்களின் உரிமையை மீறுவதாகும்.
தோட்டத் துறையிலுள்ள பெண்களுக்கு, தோட்ட வேலைவழங்குநரின் பரிந்துரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறப்புத் தேர்ச்சிபெற்ற மற்றும் வாண்மைசார் பெண்களும் ,ந்த அறிக்கையில் விலக்களிக்கப்பட்டிருப்பது மேலும் பாகுபாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
தோட்ட அத்தியட்சகர், ஒரு பெண்ணுக்கு சிபாரிசு வழங்க மறுப்பின் அவருக்கு வெளிநாடு செல்ல முடியாது. ,து, மீண்டும் அடிமை- ஜெமீன் உறவை வலுப்படுத்த முனைகிறது.
இந்த சுற்றறிக்கை, சமத்துவம் சட்டத்தின் பாதுகாப்பு எனும் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதென அவர் கூறியுள்ளார். குடும்பப் பின்னணி அறிக்கை தொடர்புபட்ட சகல சுற்றிக்கைகளையும் வறிதாக்கும் படி அவர் நீதிமன்றிடம் கேட்டுள்ளார்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025