2025 மே 21, புதன்கிழமை

பொலிஸ் சீருடை பயன்படுத்த விசேட கட்டுப்பாடு

Kogilavani   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்ஷன சஞ்சீவ

பொலிஸ் சீருடையை, களியாட்டக் கைத்தொழிலின் போது பயன்படுத்துவதற்கு  அனுமதி எடுக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கடுமையாகச் செயற்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.அண்மையில், பொலிஸாரைக் கேலி செய்யும் வகையில் விளம்பரமொன்று வெளியானதையடுத்து, இந்தத் தீர்மானத்தை பொலிஸ் திணைக்களம் எடுத்துள்ளது.

பொலிஸாரைக் கேலி செய்வதாக கூறப்படும் விளம்பரத்துக்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என பொலிஸ்  ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர, நேற்று புதன்கிழமை(02) தெரிவித்தார்.

இந்த விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் அதனை இயக்கிய இயக்குநர் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர் மேலும் கூறினார். இந்த விளம்பரம் பொலிஸாரை அவமதிக்கும் வகையில் உள்ளது. இப்படி நடப்பது இதுவே முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் பலதடவைகள் நடந்துள்ளன.

பொலிஸ் திணைக்களத்தை அவமதிக்கும் எந்தத் தயாரிப்பும் பொலிஸ் குற்றச் சட்டம் 84இன்படி தண்டிக்கப்படக் கூடியது. இதன்படி, பொலிஸ் சீருடை அல்லது அதனை போன்ற உடையை தண்டனைக்குரிய குற்றம். இந்த சட்டத்தை மீறியவரை மூன்று மாதங்கள் தடுத்து வைக்க முடியும்.
இனிவரும் காலங்களில் ஏதாவது தயாரிப்பின் போது பொலிஸ் சீருடை பயன்படுத்தப்பட வேண்டுமாயின் சட்டம் ஒழுங்கு அமைச்சு அல்லது பொலிஸ்மா அதிபரிடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும்' என ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .