2025 மே 21, புதன்கிழமை

பொலிஸ் பதிவேடு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஞ்சா வைத்திருந்தவருக்கு கைவிலங்கு 

22 கிலோகிராம் கஞ்சா வைத்திருந்த இருவரை, செவ்வாய்க்கிழமை (01) மாலை 3.30 மணியளவில் முரென்கன் பகுதியில் வைத்துப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

விபத்து; பாதசாரிகள் பலி

இருவேறு பிரதேசங்களில் பாதையைக் கடக்க முற்பட்ட இரு பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். 

மொரட்டுவை, உயனஜய மாவத்தையில் பாதையைக் கடக்க முற்பட்ட பாதசாரியொருவரை, காரொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (01) மாலை 5.30 மணியளவில் மோதியதில் குறித்த பாதசாரி உயிரிழந்துள்ளார் என பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். 

34 வயதான லலித் தர்மசிறி பெர்ணாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும் குறித்த காரின் சாரதியைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாணந்துறை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, சிலாபம், மாதம்பை பழைய நகருக்கும் புதிய நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் பாதையைக் கடக்க முற்பட்ட பாதசாரியை, வானொன்று, செவ்வாய்க்கிழமை (01) இரவு 7 மணியளவில் மோதியதில் 77 வயது முதியவர் உயிரிழந்துள்ளார் என மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

வானின் சாரதியை கைது செய்துள்ள மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஹெரோய்ன் வைத்திருந்தவர் கைது

இரத்மலானை புகையிரத நிலையத்தில் 2 கிராம் 330 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவரை, செவ்வாய்க்கிழமை (01) பகல் 1.50 மணியளவில் கல்கிஸை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர், இரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X