2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புலனாய்வு அதிகாரிகள் இருவர் விடுதலை

George   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட,  காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர், பிணையில் இன்று திங்கட்கிழ​மை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது​செய்யப்பட்டு 14 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  முதலாம், இரண்டாம் சந்தேகநபர்களே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

15 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் இவர்களை அவிசாவளை உயர் நீதிமன்ற நீதிபதி அமல் திலகரத்ன, விடுவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள மேலும், நான்கு சந்தேகநபர்களுக்கு கடந்த செப்டெம்பர் மாதம் பிணை வழங்கப்பட்டது.

இதே​​வேளை, நான்காம்,  ஐந்தாம் சந்தேகநபர்களின் பி​​ணை மனுக்கள், நவம்பர் மாதம் 8ஆம் திகதி பரீசிலிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .