2025 மே 20, செவ்வாய்க்கிழமை

புலன்விசாரணைப் பிரிவுக்கு விடுத்த அச்சுறுத்தல் குறித்து அறிக்கையிடவும்

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெஹன் சாமிக சில்வா

நிதி புலன்விசாரணை பிரிவுக்கு (FCID) விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய கொழும்பு பல்கலைக்கழக கணினிப் பிரிவின் தலைவருக்கு நேற்று வியாழக்கிமை உத்தரவிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் டி.வி.உபுல்,  கடந்த மே மாதம் 31ஆம் திகதி பயமுறுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அது தொடர்பான ஆறு இறுவட்டுக்கள் பற்றிய சோதனை அறிக்கையை வழங்குமாறே நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மஹிந்த ஆட்சிக்கு வருவாராயின், நிதி புலன்விசாரணைப் பிரிவு உத்தியோகத்தர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்படுவர்கள் என இந்த மாகாண சபை உறுப்பினர் கூறியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு எடுக்கப்பட்ட போது இவரது பேச்சுத் தொடர்பான இறுவட்டுக்கள், ஜூன் மாதம் கணினிப் பீடத்திடம் கொடுத்துவிட்ட போதும் இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறினர்.

இந்தச் சந்தேகநபர் 25,000 ரூபாய் காசு மற்றும் ஒரு மில்லியன் பெறுமதியான இரண்டு ஆள் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். விசாரணைகளின் போது இவரிடமிருந்து பொய்யான பிறந்த திகதி கொண்ட இவரது இரண்டாவது அடையாள அட்டையை, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தனர்.

இவ்வழக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X