2025 மே 21, புதன்கிழமை

புளுமெண்டல் கொலை: 13 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களையும், எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். 

 சந்தேகநபர்கள் 13பேரையும் கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை (03) ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார். 

இச்சந்தேகநபர்கள் கோரியிருந்த பிணைகளும் இதன்போது நீதவானால் நிராகரிக்கப்பட்டன. 

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது, கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி, புளுமெண்டல் மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவரும் ஆணொருவரும் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .