2025 மே 17, சனிக்கிழமை

புளுமென்டல் துப்பாக்கிப்பிரயோகம்: 16பேர் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில், கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோக சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 16 பேர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள், கையேடுகளை விநியோகித்து கொண்டிருந்தபோது, காரில் வந்த இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் இருவர் பழியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .