2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பசுகளுக்கு அம்புலன்ஸ்: டிசெம்பர் முதல் அமுல்

Editorial   / 2021 நவம்பர் 15 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய அம்புலன்ஸ் சேவையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் அமுல்படுத்தப் போவதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார்.

இந்த திட்டத்தின்படி சிகிச்சை தேவைப்படும் பசுக்கள், அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். இது தவிர பசுக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் புதிய முறை பற்றிய விழிப்புணர்வை கால்நடை பராமரிப்பாளர்களிடையே ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.

பசுக்களுக்கான அவசர ஊர்தி சேவைக்காக 515 வாகனங்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு ஊழியர்கள் என 24 மணி நேரமும் அவர்கள் பணியில் இருக்கும் வகையில் பணி முறை அமைக்கப்படும்.

இந்த சேவையை ஒருங்கிணைக்க ஒரு பிரத்யேக கால் சென்டர் வசதியையும் உத்தர பிரதேச அரசு உருவாக்கவிருக்கிறது.

இந்த கால் சென்டரை அழைத்து பசுக்களின் சிகிச்சை தேவையை தெரிவித்தவுடனேயே அடுத்த 15 நிமிடங்களுக்குள்ளாக அவர்களை தேடி அம்புலன்ஸ் சேவை வரும். பசுக்கள் தவிர மற்ற விவசாய கால்நடைகளுக்கான மருத்துவ சேவையையும் விவசாயிகள் பெற முடியும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .