Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 05 , மு.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலின் போது 50 இலட்சம் பஞ்சாங்கங்கள் அச்சிடுவதற்கு, 2 கோடியே 94 இலட்சம் ரூபாய் (29,400,00) செலவிடப்பட்டது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை (04), கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பியான சுனில் ஹந்துநெத்தி எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் கூடிய 50 இலட்சம் ரூபாய், வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஊடாக அல்ல, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக செலவிடப்பட்டதாக பதிலளிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
குறுக்கிட்ட சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி,
சமுர்த்தி பெறும் குடும்பத்தினரிடையே விநியோகிப்பதற்காகவே பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டன என்கின்றனர். நாட்டில், 18 இலட்சம் குடும்பத்தினரே சமுர்த்தி பெறுகின்றனர். அதற்கான காரணம் என்ன என்று வினவினார்.
'பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக, விதைகள் மற்றும் பல்வேறு வகையான கன்றுகன் விநியோகிக்கப்பட்டன. அவை சமுர்த்தி பெறும் குடும்பத்தினருக்கு மட்டும் விநியோகிக்கப்படவில்லை. நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்பட்டன' என்றார் அமைச்சர்.
குறுக்கிட்ட பிமல் ரத்நாயக்க எம்.பி, ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற அறைகளிலும் கொழுவுவதற்கு பஞ்சாங்கங்கள் வழங்கப்பட்டனவா என்று வினவிய அவர், அந்த பஞ்சாங்கங்கள் விநியோகிக்கப்பட்டனவா, உங்களிடம் இருக்கின்றதா என்றும் கேட்டார்.
கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளித்த அமைச்சர், எனக்கு வழங்கப்பட்டுள்ள பதில், கோவையில் இருப்பதையே நான் கூறுகின்றேன்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago