2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

படகு கவிழ்ந்து விபத்து: ஆறு மீனவர்களை காணவில்லை

Gavitha   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்களின் படகு மீது கப்பல் ஒன்று மோதியதில், மீனவர்களின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் படகில் பயணித்த ஆறு மீனவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு முதல் காணமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹிக்கடுவை மற்றும் தொடந்துவ பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த வியாழக்கிழமை காலி துறைமுகத்திலிருந்து சென்றுள்ளனர். எனினும் சென்றவர்களுள் ஒருவர் மாத்திரமே திரும்பில வந்துள்ளார். குறித்த நபர் வேறொரு படகின் மூலமே திரும்பி வந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X