2026 ஜனவரி 08, வியாழக்கிழமை

பாடப் புத்தகத்தில் சர்ச்சை: ஹரிணிக்கு ஜே.வி.பி. சதி

Freelancer   / 2026 ஜனவரி 07 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்கி, அவரின் அரசியலை  முடிவுக்குக் கொண்டு வருவதற்கு  ஜே.வி.பி. சதித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அதன்  ஓர் அங்கமாகவே  பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றார்.
 
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) அன்று இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வாழ், உயிரின வளங்கள் சட்டத்தின்  ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர்  பேசுகையில், 6 ஆம் தரப் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய ஒரு விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது தற்போது வெளிவந்துள்ளது. 

இது திட்டமிடப்பட்ட ஒரு சதி. பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்குவதற்கும், அவரது அரசியலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும்  ஜே.வி.பியின்  தலைமையகத்தில்   தீட்டப்பட்ட சூழ்ச்சியின்  வடிவமாகவே இந்த பாடப்புத்தக சர்ச்சை உள்ளது.

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் தாம் ஜே.வி.பியின் உறுப்பினர்கள் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல, தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் மாத சம்பளம்  பெலவத்த தலைமையக  நிதியத்துக்குச் செல்கிறது. ஆகவே, கட்சியின் உறுப்புரிமையை பெறாமலே தேசிய மக்கள் சக்தியினர் ஜே.பி.வி.யின் உறுப்பினர்கள் ஆகியுள்ளார்கள். ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா சாதாரணமானவர் அல்லர் .பிரதமர் ஹரிணியை அவர்கள் விடப்போவதில்லை

இதேவேளை, கடற்றொழிலாளர்கள் பற்றி அதிக கவனம்  செலுத்துவதாகவும்,  அவர்களின் நலன் பற்றி ஆராய்வதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் திங்கட்கிழமை  எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு எவ்வித நிவாரண கொடுப்பனவும் வழங்கப்படவில்லை  என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .