2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’படைப்புழுத்தாக்கம் குறைகிறது’

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டில் பல்வேறு பகுதிகளில், படைப்புழுக்களால் ஏற்பட்ட பாதிப்பு தற்போது குறைந்து வருவதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே, தற்போது இத்தாக்கம் குறைவடைந்து வருவதாகவும் எனினும் மீண்டும் இத்தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆனால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும்  விவசாயகத் திணைக்களப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ வீரேகோன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தப் படைப்புழுக்களைப் போன்று காணப்படும் மற்றைய சாதாரண புழுக்களைக் கண்டு, படைப்புழுதான் என்று அஞ்சவேண்டாம் என்றும், சாதாரண புழுக்களுக்கு, படைப்புழுக்களை அழிப்பதற்காக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகளைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு தேவையற்ற முறையில் பயிர்கள் மீது கிருமிநாசினிகளைத் தெளிப்பது சரியானதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

வாழைமரங்களில் படைப்புழுக்கள் காணப்படுவதாக வெளியான செய்தியில், எந்தவொரு உண்மையும் இல்லை என்றும் அவர் கூறினார்.  நாட்டில் சில பகுதிகளில், ஒரு வகை பூச்சி காரணமாக, பயிர்கள் பாதித்துள்ளமைக்கும் இந்தப் படைப்புழுக்களுக்கும் எந்த​வித சம்பந்தமும் கிடையாது என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .