2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பணிஸ், மாலுப்பாண் விலைகள் உயர்ந்தன

Kanagaraj   / 2016 மே 05 , மு.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணிஸ் மற்றும் மாலுப்பாணின் விலைகள், ஐந்து ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

வற் வரி அதிகரிப்பினால் பாண் தவிர்ந்த ஏனைய, தின்பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பாலும் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையாலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மாஜரின் மற்றும் போமி எண்ணெயின் விலைகளும் அதிகரித்துள்ளன.

விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், பேக்கரியைக் கொண்டுநடத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால், இதுதொடர்பில் மறுபரிசீலனை செய்து, பேக்கரிகளுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அரசாங்கம் மற்றும் நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X