Mayu / 2026 மே 21 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் ஒருவரின் ஆசனவாய்ப் பகுதியில் சுமார் 3 கிலோ எடையுள்ள உடற்பயிற்சி சாதனம் (Dumbbell) சிக்கியிருந்த நிலையில், அதனை வைத்தியர்கள் அவசர அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

32 வயதான பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலி மற்றும் தொடர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், உடனடியாக எக்ஸ்-ரே (X-ray) மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன் முடிவில், அவரது ஆசனவாய்ப் பகுதியின் உட்புறத்தில் பெரிய அளவிலான இரும்பு டம்பில்ஸ் ஒன்று சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு வைத்தியர்களே அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் தீவிர சிகிச்சைக்கான சிறப்பு வைத்திய குழுவொன்று அமைக்கப்பட்டது. உடலின் உட்புற பாகங்களுக்கு மேலதிக பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வண்ணம், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்த 3 கிலோ எடையுள்ள இரும்பு டம்பில்ஸை மருத்துவர்கள் பாதுகாப்பாக உடலிலிருந்து வெளியேற்றினர்.
இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் வைத்தியர்களிடம் விளக்குகையில், "உடற்பயிற்சி சாதனத்தை எதிர்பாராத விதமாகத் தவறாகப் பயன்படுத்திய போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டான சூழலில் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்ததால் அந்தப் பெண் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார் என்றும், சற்றுத் தாமதித்திருந்தாலும் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்றும் சிகிச்சையளித்த வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இச்சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 minute ago
24 minute ago
32 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
24 minute ago
32 minute ago
41 minute ago