2025 மே 21, புதன்கிழமை

பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவே பண மீளெடுப்பு வரி: ரவி

Gavitha   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக வங்கி உடனுண்டியல், காசோலைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டே பண மீளெடுப்புக்களின் போது வரி விதிக்கும் யோசனை வரவு- செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில்  ஒரு மில்லியன் தொடக்கம் 10 மில்லியன் வரையான பண மீளெடுப்புக்களின் போது இரண்டு சதவீதமும், பத்து மில்லியனுக்கு மேற்பட்ட  பண மீளெடுப்புக்களுக்கு மூன்று சதவீத வரியும் விதிக்கப்படும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இன்னொரு யோசனையில், செயற்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகளில் உள்ள அனைத்து நிதிகளையும், திரள் நிதியத்துக்கு எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மாற்றும் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, செயற்பாட்டில் இல்லாத வரைக்குமே, பணமானது திரள் நிதியத்தில் இருக்கும் எனவும், வாடிக்கையாளர், தனது வங்கிக் கணக்கை மீளச் செயற்படுத்த விரும்பினால், மத்திய வங்கி, பணத்தை விடுவிக்கும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் பணத்தை பறிமுதல் செய்வதாக அர்த்தப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X