2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பணம் கேட்டு மிரட்டிய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஜூலை 03 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புள்ளை ரஜமஹா விகாரையின் தலைவர்  அம்பகஸ்வெவ ராஹூல தேரரிடம் 100 மில்லியன் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய சந்தேகநபர்கள் மூவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மே மாதம் 21ஆம் திகதியன்று தேரரிடம் ​அலைப்பேசி வழியாக பணம் கேட்டு மிரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ​மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து மூன்று அலைப்பேசிகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .