2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பணியாட் தொகுதியினர் 12 பேருக்கு கொரோனா

Freelancer   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற பணியாட்தொகுதியினர் 12 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் போதே அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.

கொரோனா நிர்வாகத்தில் இலங்கை சிறப்பாக செயற்படுவதாகச் சிலர் பெருமை பேசினாலும், இந்த நாட்டில் கொரோனா நிர்வாகம் தோல்வியடைந்து நீண்ட காலமாகிவிட்டது என்றும், தற்போதைய அரசாங்கத்துக்கு நாட்டை கட்டியெழுப்பும் தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X