R.Tharaniya / 2025 டிசெம்பர் 09 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவி.
‘திட்வா’ சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் அரசாங்கத்திற்கு 250 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க உட்பட பணிப்பாளர் சபையினர் அதற்குரிய காசோலையை 2025 டிசம்பர் 08ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களிடம் பிரதமரின் அலுவலகத்தில் வைத்து கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, நிதியத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆகியோரும், பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபை பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.









4 minute ago
13 minute ago
23 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
23 minute ago
32 minute ago