Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்திரிகைகளில் வெளியாகும் மணமகன் தேவை விளம்பரத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களுடன் நட்பை ஏற்படுத்தி, அவர்களிடமிருந்து தங்க ஆபரணங்கள், பணம் ஆகியவற்றை மோசடியாக சுருட்டிக்கொண்டார் என்ற குற்றச்சாட்டில், காலியை பிறப்பிடமாகக் கொண்ட 46 வயதான ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை, மாத்தறை, வாதுவ, பொரலஸ்கமுவ, காலி, மொரட்டுவை, பாணந்துறை, வெள்ளவத்தை, நாரஹேன்பிட்டி, கல்கிஸை, கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பல பெண்களை ஏமாற்றியே அவர்களிடமிருந்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை மோசடியாக அவர் பெற்றுள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், களுத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகொட வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்து, கடந்த 26ஆம் திகதியன்று 2.80 கிராம் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் 27ஆம் திகதியன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை, பெப்ரவரி 03 ஆம் திகதி (இன்று) வரையிலும் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு பொலிஸாருக்கு, நீதவான் அனுமதியளித்திருந்தார்.
அவ்வாறு தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போதே மேற்குறிப்பிட்ட விவரமும் அம்பலமானது.
சந்தேகநபரிடமிருந்து தங்க வளையல்கள் நான்கும் தங்கச் சங்கிலி இரண்டும் மீட்கப்பட்டுள்ள என்று தெரிவித்த பொலிஸார், ஏனைய தங்க ஆபரணங்களை விற்று கெசினோ சூதாட்டத்துக்கு அவர், செலவழித்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025