Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மே 15 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணிநேரங்களுக்கு, மழையுடனான காலநிலை நிலவுமெனின், பதுளை மாவட்டத்தின், பசறை, பதுளை, ஹாலி-எல, பண்டாரவளை, ஊவா பரணகம, ஹல்துமுல்ல, ஹப்புத்தளை, வெலிமடை, லுணுகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், ஹப்புத்தளை, வெலிமடை செயலாளர் பிரிவுகளுக்கு அண்மித்த பகுதிகளுக்கும் இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மொனராகலை மாவட்டத்தின் அநேகமான பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago