Janu / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெபித்திகொல்லேவ - பதவிய பிரதான வீதியின் 18ஆம் கட்டை பகுதியில் உள்ள பாதசாரி கடவையில் வைத்து வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான 9 வயதுடைய சிறுமி, நான்கு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதில் படுகாயமடைந்த சிறுமி பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (24) இரவு உயிரிழந்துள்ளார்.
கதுருவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த சனுல்லியா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் பிரத்திகே வகுப்பொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற நிலையில் பாதசாரி கடவையில் வைத்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது வேன் ஓட்டுநர் வாகனத்தை அவ்விடத்தில் நிறுத்தாமல் சென்று பதவிய பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago