2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

புதுடெல்லி காற்று மாசு: 100 விமானங்கள் இரத்து

Editorial   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 புதுடெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக, காலை, மாலை என பகல் முழுவதும் பனிமூட்டம் காணப்படுகிறது. மாலைநேரத்தில் பனிமூட்டம் அதிகமாகி வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்து வருகிறது.வாகனங்களை ஓட்டுபவர்களும் பொதுமக்களும் அவதிக்குள்ளாயினர்.

இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக புதுடெல்லியில் ரயில் மற்றும் விமானப் பயணச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பனி மூட்டம், போதிய வெளிச்சமின்மையால் புதுடெல்லியில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், 300 விமானங்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பல ரயில்களும் காலதாமதமாகப் புறப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .