S.Renuka / 2026 ஜனவரி 19 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையிலேயே இந்த அம்சங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த 2,000 ரூபாய் நாணயத்தாள் பொதுமக்கள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்க உதவும் வகையில் பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த நாணயத்தாளை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடித்தால், வாளுடன்கூடிய சிங்கம் தெளிவாக தெரியும். அத்துடன், வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகின்றது.
மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஆறு தொட்டுணரக்கூடிய பட்டைகள் உள்ளன. புற ஊதா ஒளியின் கீழ், ஆண்டு கருப்பொருளில் ஒளிரும் இரட்டை வண்ணங்கள் மற்றும் முன்வானலை தோன்றும், மதிப்பும் தெரியும்.
இதனால் உண்மையான ரூபாய் தாள்களை இயந்திரத்தினால் அடையாளம் காண முடியும், போலி ரூபாய் தாள்களை கண்டுபிடிக்கவும் இந்த அம்சங்களைப் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
15 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
1 hours ago