2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

புதிய ஐஜிபி யார்? இன்று கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

Editorial   / 2025 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய பொலிஸ் மா அதிபர் தொடர்பான முன்மொழிவை ஆராய்வதற்காக அரசியலமைப்பு  பேரவை,  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில்  பிற்பகல் 1:30க்கு கூடவுள்ளது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் மா  அதிபருக்கான பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில், பொலிஸ் மா  அதிபருக்கான பெயரை, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க   அரசியலமைப்பு பேரவையின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளார்.

அதன்படி, இன்றைய கூட்டத்தின் போது புதிய பொலிஸ் மா  அதிபரை நியமிப்பது குறித்து அரசியலமைப்பு பேரவை இன்று (12)  இறுதி முடிவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது    .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .