Editorial / 2026 மே 17 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

சியம்பலாகஹகம பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் இருவர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி, இராஜாங்கனை, புலத்சிங்கள மற்றும் சி சியம்பலாகஹகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, 25 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுள் தம்புத்தேகம பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் சபையில் பணிபுரியும் ஊழியர்கள் இருவரும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த நிலையிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 minute ago
15 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
27 minute ago
34 minute ago