Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 ஜூன் 04 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.ஷிவானி
அரசியல் ரீதியில் முஸ்லிம் தரப்பினர் பதவி விலக எடுத்த தீர்மானம், பொருளாதார ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தாதென, அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
அமைச்சர், பிரதியமைச்சர், இராஜாங்க அமைச்சர்களாக கடமையாற்றிய முஸ்லிம் தரப்பினர் பதவி விலகியமையானது, விசாரணை நடவடிக்கைகளுக்கு இலகுவாக அமைந்துள்ளதாக தெரிவித்த அவர், அவர்கள் தங்களின் புனிதத் தன்மையை நிரூபிக்கவே பதவி விலகினர் என்றார்.
நல்லிணக்கத்தையும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைத்து, சிங்கள- முஸ்லிம் சமூகங்களிடையே பிரிவினைவாத தீயை மூட்ட அரசியல்வாதிகள் சிலர் முயற்சித்து வருகின்றனரெனவும், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago