2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பதவியுயர்வு தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைபாடு

Editorial   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்களை மறந்துவிட்டு, பிரபல அமைச்சர்களின் பிரதான பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றும் கனிஸ்ட பிரிவு பொலிஸ் பரிசோதகர்கள் 14 பேருக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் நியாயமற்ற முறையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்கள் ஜனாதிபதியிடம் முறைபாடு செய்துள்ளனர்.

இவ்வாறு பதவியுயர்வு வழங்கப்பட்டவர்களுள், ஜனாதிபதி, பிரதமரின் பாதுகாப்பு பிரிவுகளில் கனிஸ்ட பொலிஸ பரிசோதகர்கள் ஐவர் அடங்குவதாகவும், சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

பல வருடங்களாக கடமையாற்றி வரும் சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்கள் 1000 இற்கும் அதிகமானோர் காணப்படும் நிலையில், 5 வருடங்கள் குறுகிய சேவையாற்றிய கனிஸ்ட பொலிஸ் பரிசோதகர்கள் 14 பேருக்கு அரசியல் செல்வாக்குகளுடன் இவ்வாறு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும். சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X