Nirosh / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வராஜா
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், மேலதிக வகுப்புக்குச் சென்று வீடுதிரும்பவில்லை என பதுளை பொலிஸ் நிலையத்தில் மாணவியின் தாயாரால், நேற்று (20) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12இல் கல்வி கற்கும் 17 வயதான லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே, காணாமல் போயுள்ளார்.
பதுளை மாநகரில் இடம்பெறும் மேலதிக வகுப்பொன்றுக்கு, நேற்று முன்தினம் (19) சென்ற குறித்த மாணவி, வீடு திரும்பவில்லையென்று முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதுளை – கலன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த மாணவி, மேலதிக வகுப்புக்கு எடுத்து வந்ததாகக் கூறப்படும் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியவை பதுளை - கோபோ பகுதியின் நீர் நிலையொன்றின் அருகே, (தெப்பக்குளம்) இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், தோட்ட இளைஞர்கள் குழுவொன்று, மேற்படி நீர் நிலையில் தேடுதல்களை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.
காணாமல் போன மாணவி, நீர் நிலையில் விழுந்திருக்க கூடுமென என்ற சந்தேகம் எழுப்பட்டிருப்பதால், மாணவியின் தாயாரும் உறவினர்களும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் செய்த புகாரையடுத்து, தேடுதல்களை உடன் மேற்கொள்ளுமாறு, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அவசர கடிதமொன்றினை எம்.பி அனுப்பியுள்ளார்.
அத்துடன், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நேரடியாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, பதுளை பொலிஸ்சார் சுழியோடிகள் சகிதம் குறிப்பிட்ட நீர் நிலை பகுதிக்கு சென்றுள்ளனர்.
குறித்த மாணவி குறிப்பிட்ட நீர் நிலையில் விழுந்து தற்கொலை செய்துள்ளாரா அல்லது திசை திருப்பும் வகையில் அவரது புத்தகப்பை, பாதணிகள் ஆகியவற்றை நீர் நிலை அருகில் போடப்பட்டு கடத்தப்பட்டாரா என்ற வகையில் பொலிஸார் இரு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .