Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னிப்பிட்டிய தனியார் வைத்தியசாலையை இன்றிலிருந்து மீண்டும் திறந்து பணிகளை முன்னெடுக்குமாறு, மஹரகம சுகாதார சேவை அதிகாரிகளால் கடிதம் மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் அலுவலக சபையினருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீஆர். பரிசோதனையின் போது, எந்தவொரு அலுவலகருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டதையடுத்தே இந்த வைத்தியசாலையின் பணிகளை மீள ஆரம்பிக்குமாறு, அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக, மஹரகம சுகாதார சேவை அதிகாரி வைத்தியர் ரிஷpனி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவர், கொரோனா தொற்றாளராக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த தொற்றாளர் 18ஆம் திகதி சிறுநீரக பிரச்சினை காரணமாக குறித்த வைத்தியசாலைக்குச் சென்று வந்துள்ளார்.
இதன்காரணமாகவே, குறித்த வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட அலுவலக சபையினரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்;டதுடன், வைத்தியசாலையும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago