Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி, காலி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றில் ஏற்படவிருந்த பாரிய தீ விபத்து, தீயணைப்புப் படை வீரர்களின் துரித செயற்பாட்டினால் தடுக்கப்பட்டதாக, பம்பலப்பிட்டிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்துக்கு, மின்சாரம் வழங்கும் பிரதான மின் ஆழியிலிருந்து, இன்று காலை 6.45 மணியளவில் பாரியளவிலான புகை எழுந்து, அப்பகுதியெங்கும் புகைமண்டலமாகக் காட்சியளித்துள்ளது.
இதனையடுத்து, உணவக ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மருதானை தீயணைப்புப் படைப் பிரிவினரின் 3 வாகனங்கள், சுமார் 30 நிமிடங்களில் இவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், மின் ஒழுக்கின் காரணமாகப் பிரதான மின் ஆழியிலிருந்து வெளியாகிய புகை, சுமார் 2 மணித்தியாளங்களின் பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மின்சார சபை ஊழியர்களுக்கு, அறிவித்தும் அவர்கள் அவ்விடத்துக்கு சமுகமளித்திருக்காமையின் காரணமாக, மருதானைத் தீயணைப்புப் படைப் பிரிவினரே, பெரும் பிரயத்தனத்தின் மத்தியில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்கொண்டு வந்ததாக உணவக ஊழியர்கள் தெரிவித்தனர்.
குறித்த உணவகத்துக்கான மின்சாரம், தற்போது முற்றுமுழுதாகத் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
8 hours ago
9 hours ago