Freelancer / 2026 ஜனவரி 06 , பி.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். R
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago