2025 ஜூலை 05, சனிக்கிழமை

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நீக்கம்

Editorial   / 2020 ஜனவரி 03 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நீக்கிக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம், வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால், நேற்று (02) கூடிய அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை இரத்து செய்துவிட்டு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், முன்னாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் புதிதாக சமர்பிக்கப்பட்டிருந்தது.

பயங்கரவாத ஒழிப்புச் சட்டம் இரத்து செய்யப்படவேண்டுமென, ஐ.நா மனித உரிமை பேரவையில் ​யோசனையொன்றும் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் அமைச்சர் மங்களவின் இந்த யோசனைக்கு, அன்றிருந்த எதிர்க்கட்சியும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .