2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பயங்கரவாதச் சட்டம்: ’கைதான இளைஞர்களை விடுவிக்கவும்’

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறிய சிறிய குற்றங்களுக்காக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். 

வவுனியா நகரில் அவருக்கு அளிக்கப்பட வரவேற்பு விழாவின்போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

"சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து தருவோம்" என்ற சமூக ஒப்பந்தத்துடன், தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் அக்கறைச் செலுத்த வேண்டும் என்றும் இருவரும் மனம்விட்டு கலந்துப்பேசி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தார்மீக கடமையாகும் என்றும் அவர் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறுபான்மை மக்களின் புரையோடிப்போன பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அக்கறையுடன் செயற்பட்டு, அரசாங்கத்துக்கு பல அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

“நான், மீள் குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சராக இருந்தபோது, 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், சிறைப்பிடிக்கப்பட்ட 12 ஆயிரம்  இளைஞர்களை, அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்தேன். இவர்கள், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு,  குடும்பத்துடன் மீண்டும் இணைந்து வாழ வழிவகை செய்தோம். தற்போது, சிறு சிறு குற்றங்களுக்காக, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்கள், நிர்க்கதியாகியுள்ளன. சிலரின் மனைவிமார் இறந்துவிட்டதால், பிள்ளைகள் அநாதையாகி விட்டனர். இந்நிலையில், மனிதாபிமான அடிப்படையில், இவ்விளைஞர்களை விடுதலை செய்யுமாறு ​கோருகின்றேன்” என்று அவர் கூறினார்.

போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களும் களத்தில் நின்று  வழிகாட்டியவர்களும் தற்போது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர் என்றும் அதேபோன்று இவர்களும் சமுதாயத்தில் சுதந்திரமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .